January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிக்பாஸ்’ காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ள விஜய் தொலைக்கட்சியின் தொடர் நாடகம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நாடகமொன்று தற்காலிகமாக நிறுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப விழா நிகழ்வு 3 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்ற தினங்களில் எந்த நேரத்தில் ‘பிக்பாஸ்’ ஒளிபரப்பாகும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் தற்போது இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகமொன்று தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் மீண்டும் அந்த நாடகம் ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.