January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய லீக் கால்பந்தாட்டம்: ஏசி மிலானுக்கு இலகு வெற்றி

ஐரோப்பிய லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரை இத்தாலியின் ஏசி மிலான் கழக அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

இங்கிலாந்தின் செல்டிக் கழக அணிக்கு எதிரான போட்டியில் 3-1 எனும் கோல் கணக்கில் ஏசி மிலான் கழக அணி வெற்றி பெற்றது.

கிளாஸ்கோவில் நடைபெற்ற “எச்” குழுவுக்கான இந்தப் போட்டியில் முதல் பாதியில் ஏசி மிலான் கழக அணி சார்பாக 14 ஆவது நிமிடத்தில் கரவ்னிக், 42 ஆவது நிமிடத்தில் டியாஸ் ஆகியோர் கோலடித்து அணியை உயர்த்தினர்.

செல்டிக் கழக அணியால் கோலடிக்க முடியாமல் போக 2-0 என முதல் பாதியில் ஏசி மிலான் கழக அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் 76 ஆவது நிமிடத்தில் செல்டிக் கழக அணி முதல் கோலை அடைந்தது. எலியனோஸி அந்த கோலை அணிக்குப் பெற்றுக்கொடுத்தார்.

போட்டி நிறைவை எட்டிய நிலையில் உபாதைக்கான நேரத்தில் ஹியூகோ கோலடிக்க ஏசி மிலான் அணி மூன்றாவது கோலை எட்டியது.