நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அமெரிக்கர்களின் வாழ்நாளில் மிக முக்கியமான தேர்தல் என வர்ணித்துள்ள முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தேர்தல் முடிவுகளை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரிக்க முடியாத விதத்தில் அவருக்கு எதிரான தீர்ப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் டொனால்ட் டிரம்பினை கடுமையாக விமர்சித்து ஆற்றிய உரையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜோ பிடனும் கமலா ஹாரிஸும் ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற தருணத்தில் குடியரசுக்கட்சியினர் ஒவ்வொரு நாளும் தெரிவித்த வேடிக்கையான விடயங்களை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. ஜோ பிடன் , கமலா ஹாரிஸ் குறித்து நீங்கள் ஒவ்வொரு நாளும் விவாதிக்கவேண்டிய தேவையேற்படாது.
டொனால்ட் டிரம்ப் திடீரென எங்களை பாதுகாக்கப்போவதில்லை, அவரை பாதுகாப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகளை கூட அவரால் எடுக்க முடியவில்லை.
முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு ஜனநாயக கட்சியினர் மிகப் பெருமளவில் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் குறித்து எந்த சந்தேகமும் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்ககூடாது.
சீனாவில் இரகசிய வங்கிக்கணக்கு எவ்வாறு சாத்தியமான விடயம்.நான் தேர்தலில் போட்டியிட்டவேளை இவ்வாறு இரகசிய வங்கிக்கணக்கை வைத்திருப்பேன் என நீங்கள் நினைத்திருப்பீர்களா? அவ்வாறு இரகசிய வங்கிக்கணக்கை நான் பேணியிருந்தால் நியுஸ்பொக்ஸ் என்னை சீனாவின் கையாள் என தெரிவித்திருக்கும் என பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.