May 24, 2025 11:28:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளியானது ரஜினியின் ‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘விநாயகர் சதுர்த்தி’ நாளான இன்றைய தினம் காலை அண்ணாத்த ஃபர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதேவேளை இன்று மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதுடன், தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.