July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நாளையதினம் காலை 11 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியிடப்படும் என  தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு  வெளியாகியிருக்கிறது.

அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இது மிகவும் கொண்டாட்டமான  திருவிழாவாக அமைந்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’  திரைப்படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதுடன் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ்   நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் திடீரென நாளைய தினம் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்படவிருப்பது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.