November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வளி மாசடைதலால் இந்தியர்களின் ஆயுட்காலம் 9 வருடங்களால் குறையும் அபாயம்’: ஆய்வில் தகவல்

இந்தியாவில் தொடர்ந்தும் வளி மாசடைந்து வருவதால், இந்தியர்களின் ஆயுட்காலம் 9 வருடங்களால் குறையும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

வட இந்தியாவின் 480 மில்லியன் பொதுமக்கள் கடுமையாக மாசடைந்த வளியை சுவாசிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் உலகில் மிக மோசமாக மாசடைந்த வளி காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத்தமான வளியைப் பேணுவதற்கு கடுமையான கொள்கைகளைப் பின்பற்றுவதால் மக்களின் ஆயுட்காலத்துக்கு ஐந்து வருடங்களைச் சேர்க்கலாம் என்றும் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் வளி மாசடைதல் காரணமாக ஏற்படும் நோய் நிலைமைகளால் உயிரிழக்கின்றனர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் வளி மாசடைதல், உலகின் ஏனைய பகுதிகளைவிட 10 மடங்கு அதிகரித்து காணப்படுவதாகவும் அமெரிக்காவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.