January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காமெடி த்ரில்லரில் மிரட்டும் விஜய் சேதுபதியின் ‘அனபெல் சேதுபதி’ டிரெய்லர்

விஜய் சேதுபதி, நடிகை டாப்ஸி இணைந்து நடித்துள்ள ‘அனபெல் சேதுபதி’  திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை டாப்ஸி தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராதிகா, யோகிபாபு, தேவதர்ஷினி, மதுமிதா, சேத்தன், சுப்பு பஞ்சு, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அதேபோல ‘அனபெல் சேதுபதி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர்களை நாம் பார்க்க முடிகிறது.

‘அனபெல் சேதுபதி’ திரைப்பட டிரெய்லரை பார்க்கும் போது இது முழுக்க முழுக்க திரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இருக்கும்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபுவின் நகைச்சுவை ட்ராக் தனியாக செல்வதை நாம் காணமுடிகிறது. பேயுடன் கதை முழுவதும் யோகி பாபுவின் கதாபாத்திரம் நகர்கிறது.

ஒரு அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை திரில்லராக, நகைச்சுவையாக கலந்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த அனபெல் சேதுபதி.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு குறைவு இல்லை. அமானுஷ்யம், த்ரில்லர், நகைச்சுவை கலந்த திரைப்படம் என்பதால் அனபெல் சேதுபதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஆகவே பேய்க் கதை, நகைச்சுவை கலந்த இந்தப் படத்தில் , ஏற்கனவே வெளியான படங்களை விட, வித்தியாசமாக என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 17ஆம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.