January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இன்று  இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சற்று வித்தியாசமாக இதில் நடிகை பூஜா ஹெக்டே மயில் தொகையுடன் இருப்பதை போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவரின் முழு உருவத்திற்கும் மயில் வடிவம் போன்றே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாகோ’ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதேஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படம் முழுக்க முழுக்க காதல் கதை களத்தை கொண்ட படமாக இது அமைந்திருக்கிறது.அதேநேரம், 1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக ராதே ஷ்யாம் படம் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில், பாக்யஸ்ரீ சச்சின் கடேகர், முரளி சர்மா என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதுடன், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகவிருக்கிறது.

அண்மையில் இப்படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே காதல் காட்சி புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருந்தது.

இந்த போஸ்டரை பிரபாஸ் மற்றும் பூஜாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.