May 22, 2025 19:35:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தளபதி – தல சந்திப்பு: வைரலாகும் புகைப்படங்கள்

சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ள கிரிக்கெட் வீரர் தோனி, விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதனை தோனி மற்றும் விஜய் ரசிகர்கள் ‘தளபதி – தல சந்திப்பு’ என கொண்டாடி வருகிறார்கள்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது.

இதனையடுத்து சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றதுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

தற்போது, மீண்டும் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜய்யை கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியுடன் செல்வதற்காக சென்னை வந்திருக்கிறார் தோனி.

விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை கோகுலம் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ள தோனி. அங்கு படப்பிடிப்பில் இருந்த விஜய்யையும் சந்தித்துள்ளார்.