January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு சிம்பு – கௌதம் வாசுதேவ மேனன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாபெரும் ஹிட் படமான ‘விண்ணைதாண்டி வருவாயா’ திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது.

2010ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு சிம்பு-கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடித்தார்.

அதேபோல் ஐந்து வருடத்துக்கு பிறகு ,மீண்டும் கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் சிம்பு கூட்டணி இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை, ஈர்ப்பை ஏற்படுத்த போகிறது.

‘விண்ணைத் தாண்டி வருவாயா இ அச்சம் என்பது மடமையடா அதை தாண்டி தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பாடல்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கௌதம் மேனன் – சிம்பு கூட்டணி புதிய படத்தில் இணைய உள்ளதாகவும் நதிகளிலே நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்புக்கு பதிலாக வெந்து தணிந்தது காடு என்ற பெயர் மாற்றப்பட்டு ப ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் கவட்டை குச்சியுடன் நிற்கும் சிம்புவின் பின்னால் ஒரு காடு எரிந்து கொண்டிருக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கிராமத்தை பின்புலமாக வைத்து, வெந்து தணிந்தது காடு என்ற பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ளது படக்குழு.