July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மூலம் இயக்குநராகும் விஜய் ஆண்டனி

‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகின்றார்.

ஒரு இசையமைப்பாளர், நடிகராகி, தயாரிப்பாளராகி தற்போது இயக்குநராக புது அவதாரம் எடுக்கிறார் விஜய் ஆண்டனி.

2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’  படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார்.

இந்தப் படம்  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றி பெற்றது.

பிச்சைக்காரன் பாகம் ஒன்றில் சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்ததுடன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை எடுக்கவிருப்பதாக விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனத்தை விஜய் ஆண்டனி எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம், விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதேவேளை இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக டுவிட்டர் தளத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளார்.

சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுடன், 2022 இல் ‘பிச்சைக்காரன் 2’ பிளாக்பஸ்டர் படம் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.