January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று தொடங்கியது.

2020 ஆம் ஆண்டுக்கான 32 ஆவது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் இன்று ஆரம்பமாகியுள்ளன.

ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவில் இன்று மாலை கலை மற்றும் சாகச நிகழ்வுகளுடன் கோலாகலமாக ஒலிம்பிக் ஆரம்பமாகியுள்ளன.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 11,683 வீர, வீரங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதற்கமைய போட்டிகளை பூட்டிய அரங்கில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கால்பந்து, ஹொக்கி, டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பது விளையாட்டு வீர, வீரங்கனைகள் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்வதற்காக ஜப்பானின் டோக்கியோ நகரம் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.