January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது: கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படமே வலிமை.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கால்  படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த படத்தில் பொலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடிக்கின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கிட்டத்திட்ட 2 ஆண்டுகள் ஆகியும் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் ‘வலிமை அப்டேட்’ கேட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு வலிமை படத்தின் மோஷன் வெளியானதால் அஜித் ரசிகர்கள் #ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.