January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (18.10.2020 – 24.10.2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா
(இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)

மேஷ இராசிக்கு அடுத்தது ரிஷபம். ரிஷபத்துக்குரிய கோள் சுக்கிரன். இது வாக்குஸ்தானம் (குடும்பம், கல்வி, மனநிலை) . ஆகவே மேஷ இராசிக்காரர்களுக்கு அதாவது குடும்பாதிபதி சுக்கிரன் நல்ல அம்சத்தில் இருந்தால் கலைஞராகவும் சுகபோகியாகவும் விளங்குவார்கள். செல்வம் நிறைந்திருக்கும்.

இந்த ஐப்பசி மாத தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் செவ்வாய் வக்கிரம் பெற்று உங்கள் இராசியிலேயே சஞ்சாரம் செய்கின்றார். 6 ஆம் இடத்தில் புதன் உச்சம் ஆட்சி பெருவதுடன் வக்கிரமடைகின்றார். அதேவேளை குருக்கிரகம் தனுசு இராசியில் ஆட்சிபலம் பெற்று மூலத்திரிகோணம் பெற்று அதிலிருந்து உங்கள் இராசிக்கு பார்வையை செலுத்துகின்றார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை இருப்பதால் வக்கிர கிரகங்களின் ஆதிக்கம் இருந்தாலும் இந்த குருவின் பார்வையால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. மேலும் குரு மங்கள யோகமும் உங்களுக்கு இருப்பதால் எல்லா காரியங்களும் சிறப்பாக நிகழும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 22, 23

(கார்த்திகை 2ஆம்,3ஆம்,4ஆம் பாதம் ரோகினி)

இடப இராசிக்கு காளை மாடுதான் சின்னமாக அமைந்திருக்கின்றது. இடப இராசி வாயு இராசியாகும். இந்த இராசிக்கு சொந்தக் கிரகம் சுக்கிரன் ஆவார். மேலும் சந்திரனுக்கு இடப இராசி உச்ச வீடுமாகும். சாயாக் கிரகமான ராகுவிற்கும் இடப இராசி உச்ச வீடாகும்.

ஐப்பசி மாத தொடக்கத்தில் உங்களது இராசிநாதன் சுக்கிரன் சுகஸ்தானமான 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். பாக்கியதானாதிபதி புதன் வக்கிரமடைந்திருந்தாலும் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார்.

விரயஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்கின்றார். எனவே, பொருளாதாரத்தில் உங்களுக்கு போதியளவு திருப்தி ஏற்படும். உடன்பிறந்தவர்கள்களின் இல்லங்களில் சுப காரியங்களும் நடைபெறும்.

அஅதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 23

(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

மிதுன இராசியினர் என்றாலே கற்பனை ஊற்றெடுக்கும் வளம் கொண்டவர்கள். மிதுன இராசிக் காரர்களாக இருப்பவர்கள் கற்பனை வளத்திற்கு குறைவில்லாதவர்கள். அவர்களின் எண்ணத்தை கோர்வையாக தொகுத்து கூறுவதில் சமத்தர்கள்.

ஐப்பசி மாத தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் புதன் 4 ஆம் இடத்தில் சுகஸ்தானத்தில் வக்கிரம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார். எனினும் அவர் ஆட்சியும் உச்சமும் பெற்றிருப்பதால் உடல் ஆரோக்கிய தொல்லைகள் அதிகம் தரமாட்டார்.

மேலும் கண்டகச் சனியின் ஆதிக்கமும் இருந்தாலும் குருவின் நேரடிப் பார்வை உங்கள் இராசி மீது படுவதால் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. உங்கள் காரியங்கள் இறுதி நேரத்திலாவது எப்படியாவது கைகூடி வெற்றியடைந்துவிடுவீர்கள். எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து நடப்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 21

(புனர்பூசம் 4ஆம்பாதம், பூசம், ஆயிலியம்)

கடக இராசிக் காரர்கள் கடந்த காலத்தை சுவைத்துக்கொண்டே வாழ்வார்கள். அதனால் புதிதாக ஒரு காரியத்தை செய்ய வேண்டுமானாலும் முன்பு இப்படிச் செய்தோமே சௌகரியமாக முடிந்ததா என்று பழையதை எண்ணிப்பார்ப்பர். இந்த குணத்தால் இவர்களுடைய எதிர்காலத்தில் சுமக்கங்கள் ஏற்படும்.

இந்த மாத தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் சந்திரன் தனாதிபதி சூரியனோடு இணைந்து சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றார். மேலும் செவ்வாயின் பார்வை சந்திரன், சூரியன் மீது பதிகின்றது.

கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு உரிய நேரத்துக்கு வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் தங்களது பணிகளில் திருப்தியாக இருந்து உயர்நிலையை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 18

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

சிம்ம இராசிக் காரர்கள் தமக்கு இல்லாத யோக்கியதைகளை எல்லாம் அடித்துக்கொண்டு புகழும் விளம்பரமும் பெற கொஞ்சமும் விரும்பாத குணமுடையவர்கள். அதேவேளை தங்கள் உழைப்புக்கும் சுயநலமற்ற சேவைக்கும் ஏற்ற புகழை விரும்புவதில் விருப்பம் கொண்டவர்கள்.

உங்களது இராசிநாதன் சூரியன் இம்மாத தொடக்கத்தில் நீசம் பெற்று விரயாதிபதி சந்திரனோடு இணைந்து துலாம் இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். அவர்களை உங்களுக்கு யோகத்தை அள்ளித்தரும் செவ்வாய்க் கிரகமும் பார்க்கின்றார்.

குருவின் பரிபூரண பார்வையும் உங்கள் இராசி மீது விழுகின்றது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைக்கூடிவரும். எதிர்பார்த்தப்படி தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 18

(உத்தரம் 2ஆம்,3ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3ஆம்,4ஆம் பாதம்)

கன்னி இராசியில் பிறந்தவர்கள் இன்னதுதான் பிடிக்கும் என்று சொல்லமாட்டார்கள். புதன் ஆட்சிக்காரகன் ஆகையால் பலவகை உணவு வகைகளையும் வாய்க்கு ருசியாக இருந்தால் அளவுடன் சாப்பிடும் குணமுடையவர்கள்.

உங்கள் இராசிநாதன் புதன் உச்சம் பெற்றும் ஆட்சி பெற்றும் அத்துடன் வக்கிரமடைந்து சஞ்சாரம் செய்கின்றார். உங்கள் இராசிநாதன் புதன் உச்சம் பெறுவது உங்களுக்கு நன்மைதான் அத்துடன், ஆட்சியும் பெற்றிருக்கின்றார்.

உடல் ஆராக்கியம் மிகுந்த திருப்தி நிலையைத் தரும். ஏதிர்பாராத விதத்தில் பணவரவும் உங்களுக்கு இருக்கும். தொழிலில் உயர்வு ஏற்படும். உத்தியோகத்திலும் உயர்வு ஏற்படும். எல்லாவிடயத்திலும் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 21, 22, 23

 (சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

துலாம் இராசிக்காரர்கள் மனித மனம் தராசு போல் செயற்பட வேண்டும் என்ற குறிக்கோளில் தான் துலாம் இராசியின் அடையாளமாக தராசு அமைந்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. சமநோக்கு குணம் கொண்டவர்கள். எல்லோரையும் சமமாக நேசிப்பவர்கள். எடைபோடுபவர்கள்.

உங்கள் இராசிநாதன் ஐப்பசி மாத தொடக்கத்தில் சுக்கிரம் இலாபத் தானத்திலும் இலாபாதிபதி சூரியன் உங்கள் இராசியிலும் சஞ்சரிக்கின்றார்கள். குருவால் பார்க்கப்பட்ட செவ்வாயின் பார்வை உங்கள் இராசியில் பதிகின்றது.

எனவே, பொருளாதாரத்தில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். சுயதொழில் விருத்தியடையும். மேலும் சொத்துக்கள் வாங்குவதிலும் விற்பதிலும் அதிக நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 19ரூபவ் 20ரூபவ் 21

(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

விருச்சிக இராசிக் காரர்கள் பொதுவாக தாங்கள் கலந்துகொள்ளாதது அல்லது தங்களை யோசனை கேட்காமல் செய்தது எதுவும் நன்றாக தரமாக அமையாது என்று கூறுபவர்கள்.

ஐப்பசி மாத தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். தனாதிபதி குரு தனஸ்த்தானத்திலும் இலாபாதிபதி புதன் இலாபத் தானத்திலும் இருப்பதால் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும்.

2 ஆம் வீட்டுக்குரிய குரு 2 ஆம் வீட்டிலும் 11 ஆம் வீட்டுக்குரிய இலாபத் தானத்துக்குரிய புதன் 11 ஆம் இடத்திலும் இருப்பது மிகவும் சிறப்பு.

குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். சொத்துக்களால் இலாபம் கிடைக்கும். மேலும் வெளிநாட்டு உதவிகளும் வந்துசேரும். மகாலக்ஷ்மியின் பரிபூரண அணுக்கிரகமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 21, 22, 23

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

தனுசு இராசிக்காரர்களிடம் சொல்லுக்கேற்ற செயலை பெரும்பாலும் காணமுடியாது. சிலேடையாக பேசுவதில் இவர்கள் சமத்தர்கள். உங்கள் இராசிநாதன் குருபகவான் உங்கள் இராசியிலேயே ஆட்சிபெற்று மூலத்திரிகோண பலம் பெற்றிருக்கின்றார்.

அவருடன் உங்களுக்கு 2 ஆம் வீட்டுக்குரிய தனாதிபதியும் அதேபோன்று உங்கள் 3 ஆம் வீட்டுக்குரிய சகாய தானாதிபதியான சனிக்கிரகமும் சேர்ந்து தனுசு இராசியில் சஞ்சாரம் செய்கின்றன.

சனிக்கிரகமும் குருக்கிரகமும் நட்பு பெற்றவர்கள். இதனால் வருமானம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். சுயதொழில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு ஏற்படும். எடுத்த காரியங்கள் தங்குதடையின்றி நடைபெறும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 18

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

மகர இராசிக்காரர்கள் தாங்கள் அறிந்த தொழில்மூலம் நன்றாக உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற முயற்சியை கைவிடார். ஒரு சிலர் எதிர்காலத்தை சொல்லும் ஜோதிடம், கைரேகை போன்ற துறைகளிலும் சுமாராக விளங்கும் தன்மை கொண்டவர்கள்.

ஐப்பசி மாத தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் சனி செலவுஸ்தானமான 12 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். அத்துடன் உங்களுக்கு செலவுஸ்தானத்திற்குரிய விரயாதிபதி குருவும் செலவுஸ்தானமான 12 ஆம் இடத்தில் சேர்க்கையடைந்திருக்கின்றார்.

சனியும் குருவும் சேர்ந்திருக்கின்றார்கள். அத்துடன், 7 ½ சனியும் இப்பொழுது நடைபெறுகின்றது. எனவே திட்டமிட்டு செலவு செய்வது மிகவும் நல்லதாகும். ஏதிர்பாராத செலவுகள் ஏற்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். மேலும் வரவு 8 அணா செலவு 8 அணாவாகத்தான் இருக்கும். பொறுமையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லதாகும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 18, 19, 20

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

கும்ப இராசிக்காரர்கள் தெளிவான சிந்தனையும் போக்கும் அவசரப்படாமல் எந்தப் பிரச்சினையையும் பொறுமையாக அலசிப் பார்க்கும் சுபாவமும் கொண்டவர்கள். ஐப்பசி மாத தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் சனி 11 ஆம் இடமான இலாபத்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றார்.

அத்துடன் உங்கள் இராசிக்கான 11 ஆம் இடத்துக்குரிய இலாபாதிபதியும் குருவும் சேர்ந்து சஞ்சாரம் செய்கின்றார். எனவே உங்களது பொருளாதாரம் வளமான நிலையை அடையும். மேலும் உங்களது கூட்டு ஒப்பந்த வியாபாரங்களும் நன்மையாக அமையும்.

அதேவேளையில் எல்லா விடயங்களும் உங்களுக்கு சாதகமாகவே வந்து சேரும். மிகவும் யோகம் தரும் காலமாக இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மேலும் வெற்றிதரும் தானத்தில் செவ்வாய் பலம்பெற்றிருப்பதால் எதிர்பார்த்த வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளையும் வென்றுவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 18, 19

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சுக்கிரன் மீன இராசியில் உச்சம். குரு மீன இராசியின் ஆட்சிக்கிரகம் இந்த இரண்டு கிரகங்களின் அம்சமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். அழகாகவும் கவர்ச்சியாகவும் விளங்குவார்கள். நல்ல ஆடைகளை அணிவார்கள். காம உணர்ச்சி மிக்கவர்கள்.

ஐப்பசி மாத தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் குருபகவான் தொழில் ஸ்தானமான 10 இல் சஞ்சாரம் செய்கின்றார். 10 இல் குருபகவான் வரும்போது சில மாற்றங்கள் ஏற்படலாம் என்பது பொதுவழக்கு.

பொதுவாழ்வில் மட்டுமல்ல உத்தியோகத்திலும் கூட இந்த நிலை வரலாம் என்பதுதான் பொதுவான கருத்தாகும். உத்தியோகத்திலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் 2 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் பொருளாதார நிலை மிக நன்றாக இருக்கும். தொழில் நடத்துபவர்கள் அதில் முன்னேற்றம் காண்பார்கள். மேலும் சுய தொழிலில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பாக வாரமாகும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 19, 20, 21