January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனில் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் நிறைவுக்கு வருகிறது

பிரிட்டனில் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் 16 மாதங்களின் பின்னர் நிறைவுக்கு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரிட்டனில் நடைமுறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல்களில் தளர்வு கொண்டுவரப்படுவதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றன இனிமேல் சட்டத்தில் கட்டாயமல்ல என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் வீட்டில் 6 பேரே இருக்க முடியும் என்ற சட்டமும் தளர்த்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஜூலை 12 ஆம் திகதி கொரோனா நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் கொரோனா வழிகாட்டல்களில் தளர்வு கொண்டுவர முடியும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முகக் கவசம் அணிவதற்கான சட்டம் நீக்கப்பட்டாலும், நெரிசலான இடங்களில் முகக் கவசம் அணிவதை அவர் வரவேற்றுள்ளார்.

பிரிட்டனில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்பு வீதத்தைக் குறைப்பதில் தடுப்பூசி வழங்கியமை தாக்கம் செலுத்தியதாக பிரதமர் போரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் சுய தனிமைப்படலில் இருக்கும் சட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.