
தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்புகள் யாவும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கொரோனா காரணமாக இடை நிறுத்தப்பட்ட விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இறுதியாக ஜோர்ஜியா நாட்டில் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.இந்நிலையில் கொரோனா சூழ்நிலையை கருதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.
விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்குகிறது.
‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் வெளியான பீஸ்ட் பட போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே, நகைச்சுவை நடிகர் யோகிபாபு மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.