November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவை சேர்ந்தது அல்ல’; மத்திய அரசு விளக்கம்

பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த ஒக்டோபர் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கியது தெரிய வந்துள்ளது.

அத்தோடு, உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்திய வகையைச் சேர்ந்தது என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் இது தவறான தகவல் எனவும் இந்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்கள் உள்ள 44 நாடுகளி்ல் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை கொரோனா வைரஸின் 4,500 மாதிரிகள் கண்டறியப்பட்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவுவதற்கு பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ்தான் காரணம் எனவும் இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே இந்த புதிய வைரஸை சில ஊடகங்கள் இந்திய வகை உருமாறிய கொரோனா வைரஸ் என்று பெயரிட்டு அழைக்கின்றன.இந்தியாவில் உருவானது என்று தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளதில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதுபோன்ற எந்த கருத்தையும் உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை என இந்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் 32 பக்க அறிக்கையில் எந்த இடத்திலும் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்திய வகையைச் சேர்ந்தது என்று எங்கும் குறிப்பிடவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் இந்தியா என்ற வார்த்தையே இல்லை எனவும், இந்தியாவில் இவ்வாறான ஒரு உருமாறிய வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.