January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (04.10.2020- 10.10.2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா
(இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)

மேஷ ராசிக்காரர்கள் சுருண்ட அழகிய கேசம் பெற்றிருப்பார்கள். சிறந்த ஆடை அணிபவர்கள். தர்ம சிந்தனையும் ஓரளவு மனதில் கொண்டவர்கள்.

இதுவரை வக்கிர இயக்கத்தில் இருந்த குருவும் சனியும் வக்கிர நிவர்த்தி ஆகிவிட்டார்கள். எனவே , 9 ஆம், 12 ஆம் இடங்களுக்கு அதிபதியான குருக்கிரகம் தனுசு இராசியில் பலம் பெற்றிருப்பதால் பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு தகவலும் வந்து சேரும்.

மேலும் 10, 11  ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி குருவோடு சேர்ந்து தனுசு இராசியில் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிர்பார்க்காத வண்ணம் நல்ல செய்தி வந்துசேரும்.
அதிர்ஷ்ட திகதி- 6,7

(கார்த்திகை 2ஆம்,3ஆம்,4ஆம் பாதம் ரோகினி)

ஒரு பொருள் வாங்க கடைக்குச் சென்றால் அதனைப் பற்றி உயர்வாகச் சொன்னாலும் கவர்ச்சிப் பேச்சில் மயங்கி விடமாட்டார்கள். தாங்கள் திருப்தியடைந்தால் தான் அதனை வாங்குவார்கள்.

தனுசு இராசியில் ஆட்சியான குருவினது பார்வை 2 ஆம், 4 ஆம், 12 ஆம் இடங்களை பார்ப்பதால் 2 ஆம் இடமான வாக்கு, தனம், குடும்பம், கல்வி இடங்களையும் 4 ஆம் இடமான தாயினதும் வாகனங்களையும் சொத்துகளையும் குறிக்கும்.

மேலும் 12 ஆம் இடமான அயன, சயன, போக தானங்களையும் பார்ப்பதால் இவை அனைத்திலும் உங்களுக்கு நன்மைகளே ஏற்படும்.
அதிர்ஷ்ட திகதி- 9,10

(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

பல தொழில்களை இழுத்துப் போட்டுக்கொண்டு திண்டாடுவர். ஆனால் வெளியில் மனப் போராட்டத்தை காட்டிக்கொள்ள மாட்டார்கள் . அபாரமாக உழைப்பவர்கள்.

உங்கள் இராசிக்கு 7 ஆம் இடத்தில் தன் சொந்த வீடான தனுசு இராசியில் இருந்தபடி ஆட்சியான குரு பலம் பெற்று உங்கள் இராசியைப் பார்ப்பதால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள், செயலாற்றுவீர்கள்.

மேலும் தனுசு இராசியில் கண்டகச் சனியாக 7 இல் சனி இருப்பதால் உங்களுக்கோ அல்லது உங்களது மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றலாம்.
அதிர்ஷ்ட திகதி – 4,5

(புனர்பூசம் 4ஆம்பாதம், பூசம், ஆயிலியம்)

குடும்பத்தின் முக்கிய நபர்களை பற்றியும் அவர்களுடைய திட்டங்களைப் பற்றியும் சதா சிந்தனை செய்துகொண்டே இருப்பார்கள். சிறிய விடயங்களுக்கு கூட உணர்ச்சி வசப்படுவார்கள்.

தனுசு இராசியில் உங்கள் இராசிக்கு ஆட்சியான குரு 6 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். 6 இல் குரு ஊரில் பகை என்பதற்கமைய உறவினர்கள், அயலவர்கள் போன்றவர்களால் சிறுசிறு எதிர்ப்புகள் தோன்றலாம்.

தனுசுவிலுள்ள ஆட்சியான குருவின் பார்வை 2,10,12 இடங்களில் படுவதால் உத்தியோக மாற்றங்கள், இடமாற்றங்கள் நன்மையைத் தரும். சுப பிரயாணங்களும் செலவுகளும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திகதி-7,8

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

எடுத்த காரியத்தை வேகமாக சிந்தித்து செயலாற்றும் திறனும் உடல் வலுவும் உளத்திடமும் பெற்றுவிளங்கும் குணமுடையவர்கள் நீங்கள்.

தனுசு இராசியில் ஆட்சி பலம் பெற்ற குருவானவர் 5 ஆம் இடத்தில் இருந்து உங்கள் இராசியைப் பார்ப்பதும் , பாக்கியஸ்தானமான 9 ஆம் இடத்தைப் பார்ப்பதும், இலாபதானமான 11 ஆம் இடத்தைப் பார்ப்பதும் பரம்பரை சொத்துகள் வந்துசேர காரணமாகும்.

உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும். பதவியும் உயரும். உத்வேகத்துடன் செயற்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி-4,5,8,9

(உத்தரம் 2ஆம்,3ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3ஆம்,4ஆம் பாதம்)

கன்னி இராசி நேயர்கள் தங்களைத் தாங்களே சோதனை செய்துப் பார்த்து தங்களிடமிருக்கும் குறைகளையும் குற்றங்களையும் நீக்கிக்கொள்ள முயல்வர்.

உங்கள் இராசிக்கு தனுசு இராசியில் ஆட்சியான குரு அர்த்தாஷ்டம குருவாகவும் சனிக்கிரகம் அர்த்தாஷ்டம சனியாகவும் இருப்பதால் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள்.

தாய்வழி உறவினர்களுடன்  பொறுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் நடந்துகொள்ளுங்கள். அர்த்தாஷ்டம சனியின் பிடியில் உள்ளதால் தொழில் துறைகளில் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். குருவின் பார்வை 8 ஆம் இடத்தில் படுவதால் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திகதி-6,7

(சித்திரை 3ஆம்,4ஆம் பாதம், சுவாதி, விசாகம்)
தாம் மேற்கொள்ளும் செயல்களும்,தீர்மானங்களும் தங்கள் மனதுக்கு சரியானவையாகப் படும் வரையில் தீர்க்கமாக சிந்திப்பார்கள். அதுவரை பரபரப்புடன் இருப்பார்கள்.

குருக்கிரகம் தனுசு இராசியில் 3 ஆம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இது சிறப்பல்ல. எனினும் குருபகவானின் பார்வை உங்கள் இராசிக்கு 7ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் போன்ற மங்களகரமான காரியம் கைக்கூடிவரும்.

9 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தந்தை வழி சொத்துகள் சேரும். 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி-9

(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிக இராசியில் பிறந்தவர்கள் அவர்களின் இயற்கை குணம் பிரகாசிக்க விரும்புபவர். அதாவது தூண்டித்துருவி பார்க்கும் இயல்புடையவர்கள். புலனாய்வுத்துறையில் வல்லமைப் பெற்றவர்கள்.

தனாதிபதியான குருக்கிரகம் ஆட்சிபெற்ற குருவாக உங்கள் இராசிக்கு 2 ஆம் இடமான தனஸ்தானத்திலேயே பலம் பெற்றிருப்பதால் கல்வித்துறையில் உள்ளவர்கள் முன்னேற்றமடைவார்கள். பேச்சைத் தொழிலாகக் கொண்டவர்கள் சிறப்படைவார்கள். குடும்ப உறவும் பலப்படும். பணவரவுக்கு குறைவிருக்காது.

மேலும் 2 ஆம் இடத்தில் குருவுடன் சனியும் சேர்ந்திருப்பதால் உங்களது வார்த்தைகள் மிகவும் நிதானமாக இருக்கும். மற்றவர்களுக்கு ஆறுதலையும் கொடுக்கும். குருக்கிரகமும் சனிக்கிரகமும் வக்கிர நிவர்த்திப்பெற்றுள்ளன.
அதிர்ஷ்ட திகதி-10

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

சொல்லுக்கேற்ற செயலை இவர்களிடத்தில் பெரும்பாலும் காணமுடியாது. சிலேடையாக பேசுவதிலும் இவர்கள் சமத்தர்கள்.

தனுசு இராசியில் இராசி நாதனான குருவானவர் வக்கிர நிவர்த்தியடைந்து நவம்பர் 15 வரை பலம்மிக்க குருவானவராக சஞ்சரிக்கின்றார்.

உங்கள் இராசிக்கு 3 க்குரிய முயற்சி தானத்துக்குரிய சனிக்கிரகம் வக்கிர நிவர்த்தியடைந்துள்ளதால் உங்களது எதிர்ப்பார்ப்புகள்  அனைத்தும் நிறைவேறும் வண்ணம் படிப்படியாகக் கை கூடிவரும்.

குருவின் பார்வை 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பதவியும் 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணமும் 9 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பரம்பரை சொத்துகளும் கை கூடிவரும்.
அதிர்ஷ்ட திகதி-8

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

இந்த இராசியில் பிறந்த குழந்தைகள் சாந்தமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால், வெளித்தோற்றம் போல் மனம் அப்படி சாந்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஏழரை சனியின் -உங்களுக்கு விரயத்தானமான- 12 ஆம் இடத்தில் சனிக்கிரகம் சஞ்சாரம் செய்கின்றார். அதேபோன்று குரு பகவானும் தனுசு இராசியில் ஆட்சியான குருவாக விரயத்தானமான 12 ஆம் இடத்தில் சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கின்றார்.

இப்பொழுது 2 கிரகங்களும் வக்கிர நிவர்த்தியடைந்து பலம்பெற்றுள்ளன. இரும்புத் தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கும் வண்டி, வாகன தொழிலில் உள்ளவர்களுக்கும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வரவு 8 அணாவாக இருக்கும் செலவு 10 அணாவாக இருக்கும்.
அதிர்ஷ்ட திகதி-4,5

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

கும்ப இராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கருத்தாக இருந்து எதிர்ப்படும் வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பற்றிக்கொண்டு முன்னேறுவதில் கவனமாக இருப்பார்கள்.

உங்கள் இராசிநாதன் சனிக்கிரகம் வக்கிர நிவர்த்தியடைந்து இலாபத்தானமான 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். வண்டி, வாகன யோகம் ஏற்படும். இரும்புடன் தொடர்புடைய தொழில் துறையில் உள்ளவர்கள் பெரும் இலாபத்தை அடைவர்.

உங்கள் இராசிக்கு 2 ஆம் இடமான குடும்ப தானாதிபதியான ஆட்சிபெற்ற குருவோடு சனி சேர்ந்திருப்பதாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இப்பொழுது குருவும் சனியும் வக்கிர நிவர்த்தியடைந்திருப்பது மிகவும் நன்மையாகும்.
அதிர்ஷ்ட திகதி-7,8

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீன இராசி ஜலராசியானதால் நீரின் மேல் அலாதிப்பிரியம் இருக்கும். நீர் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரை என்று நீர் நிலைகளுக்கு அருகாமையில் வாழ விரும்பும் குணமுடையவர்கள்.

உங்கள் இராசிநாதன் குரு பகவான் தனுசு இராசியில் ஆட்சிப்பெற்று பலமான குருவாக 10 இல் சஞ்சாரம் செய்கின்றார். அத்துடன் , உங்கள் இராசிக்கு 11 ஆம் 12 ஆம் இடங்களுக்குரிய சனி பகவானும் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கின்றார். இந்த குருவும் சனியும் வக்கிர நிவர்த்தி பெற்றுள்ளதால் உங்களது தொழில்துறை மிகவும் சிறப்பாக இருக்கும்.

புதிய வாகனங்கள் வாங்குவதங்கான யோகமும் ஏற்படும். 10 இல் குரு இடமாற்றத்தை ஏற்படுத்தினாலும் உங்கள் இராசிக்கு அது நன்மையான மாற்றத்தையே தரும்.
அதிர்ஷ்ட திகதி-4,5,10