January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மே மாதம் 2ஆம் திகதிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிக்கச் சென்று விடுவார்” – வானதி சாடல்

“மே 2-ம் திகதிக்குப் பின்னர் பிக் பாஸ் அல்லது புதிய படத்தில் நடிப்பதற்கு கமல் போய்விடுவார்” என வானதி ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிர் அணித்தலைவி வானதி ஸ்ரீனிவாசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.

திரைத்துறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள வானதி ஸ்ரீனிவாசன் சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை என தெரிவித்திருக்கிறார்.

தொலைக்காட்சியில் வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும், தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை தான் கொண்டு சேர்த்து இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக நிச்சயமாக 100% வெற்றி பெரும் எனக்கூறிய வானதி, கோவையை சர்வதேச தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.