October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்யாவின் “டெடி”  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள ‘டெடி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆக்‌ஷன், த்ரில்லர் காட்சிகளுடன் ஆர்யா நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் அவரது மனைவி சாயிஷாவும் நடித்திருப்பது விசேட அம்சமாகும்.

முக்கியமாக ‘டெடி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் மகிழ்திருமேனி நடித்திருப்பது சற்று வித்தியாசமாகவும் மாறுபட்ட பார்வையிலும் உள்ளது.

மேலும், இப்படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால் என பலர் முக்கிய நட்சத்திரங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனால் படத்தில் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது என நாம் நம்பலாம்.

நாய்கள் ‘ஜாக்கிரதை, நாணயம், டிக் டிக் டிக், மிருதன்’ போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் அடுத்ததாக அவரின் கதையோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘டெடி’.

இந்தப்படம் மருத்துவத்துறைச் சார்ந்த த்ரில்லர் படம் என்பது ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது.
‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய படம் கொரோனா காரணங்களால் தள்ளிப்போன நிலையில் ஓடிடிக்கு விற்கப்பட்ட படங்களில் டெடியும் இணைந்துள்ளது.

இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் மார்ச் 17ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.