July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் அருண்பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருண்பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்துள்ள ‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதன்முதலாக தந்தையும் மகளும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல ரசிகர்கள் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘அமேசான் ப்ரைம் ஓடிடி’ தளத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற மலையாள மொழி திரைப்படம் தான் ஹெலன்.

இந்த திரைப்படம் தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என பெயர் மாற்றம் செய்து ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது.

நடிகர் அருண்பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் இந்தப் படத்தில் அப்பா , மகள் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தத் திரைப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

90களில் பல திரைப்படங்களில் நடித்தும் தயாரித்தும் பிரபலமான நடிகர் அருண்பாண்டியன் ஊமை விழிகள், இணைந்த கைகள், தேவன், அதிகாரி உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.