January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (27.09.2020- 03.10.2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர பாபு சர்மா குருக்கள்

(இயக்குனர்-ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)
சந்தோஷம் நிரம்பிய சூழ்நிலை இருந்தால் மனசும் உல்லாசமாக இருக்கும். இனிப்பு பண்டங்களை விரும்பி உண்ணும் குணம் உடையவர்கள். துலாம் ராசியில் புதன் சந்திக்கின்றார். உங்கள் ராசிக்கு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன்.

அவர் 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது மாமன்,மைத்துனர் வழியில் உள்ள பிரச்சனைகள் தீரும். அவர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். இல்லத்தில் மங்கள விழாக்கள் நடைபெறுவதில் இருக்கும் முட்டுக்கட்டைகள் அகலும். உடன்பிறப்புகளுடன் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் சுமூகமாக தீரும்.

(கார்த்திகை 2ஆம்,3ஆம்,4ஆம் பாதம் ரோகினி, மிருகசீரிடம் 1ஆம், 2ஆம் பாதங்கள்)
சமையலை முன்பே திட்டமிட்டு கொண்டுதான் சமையலறையில் நுழைவார்கள். வேகமாக செய்தாலும் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் ருசியாக இருக்கும்.

துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் 6-ம் இடத்தில் உள்ளார். உங்களுக்கு பணவரவில் இருந்த தடைகள் அகலும். எதிரிகளின் தொல்லைகள் அகல எடுத்த முயற்சி பலன் தரும். மாமன், மைத்துனர் வழியில் உள்ள மனகசப்பு அகலும், புதிய வண்டி, வாகனங்கள் வந்து சேரலாம். உத்தியோக ரீதியிலான பதவி உயர்வுகளை அடையலாம்.

(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1ஆம்,2ஆம்,3ஆம் பாதங்கள்)
உங்களுடைய எண்ணத்தை கோர்வையாக தொகுத்துச் சொல்லும் திறமை உள்ளவர்கள். உங்கள் ராசிநாதன் புதன் துலாம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்வது மிகுந்த யோகம் தரும்.

பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைவதால் பகைவர்களின் தொல்லை நீங்கும், சொத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீரும். மாமன், மைத்துனர் வழி உறவுகள் மேம்படும். தொட்டது எல்லாம் துலங்கும் வாரம் இது ஆகும்.

(புனர்பூசம் 4ஆம்பாதம், பூசம், ஆயிலியம்)
குறிப்பிட்ட வட்டத்துக்குள் தான் இவர்கள் தங்களுடைய பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்பவர்கள். துலாம் ராசியில் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.

நல்ல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடி வரலாம். உங்களது நண்பர்கள் நல்ல விதத்தில் கை கொடுத்து உதவி செய்வார்கள்.உடல் ஆரோக்கியம் மேம்படும். பாகப்பிரிவினை சுமூகமாக தீரும்.உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

(மகம்,பூரம், உத்திரம்; 1ஆம்பாதம்)
எதையும் ஒரு வேகத்தோடு செய்வதால் இவர்களுக்கு ஓய்வு மிகத் தேவை.அதிகாரமுள்ள பதவிகளை வகித்தாலும் சொந்தத் தொழிலே ஏற்றது. துலாம் ராசியில் புதன் சஞ்சரிக்கிறார்.உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன் -3ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் வெற்றிகள் ஸ்தானம் பலம் அடைகின்றது. எனவே தடைப்பட்ட சில காரியங்கள் இப்போது நிறைவேறும். சொத்துப் பிரச்சினைகள் தீரும்.மாமன், மைத்துனர் வழி சுப நிகழ்வுகளில் கலந்து கொண்டு, மனம் மகிழ்வீர்கள்.

(உத்தரம் 2ஆம்,3ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3ஆம்,4ஆம் பாதம்)
குடும்பத்தில் லட்சுமி வாசம் செய்வாள். புத்தி சாதூர்யமும், உயர்ந்த திறமையும் எந்த சிறு காரியத்திலும் பிரதிபலிக்கும். ஊரார் எல்லாம் அவர்களை புகழ்வர். துலாம் ராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.

உங்கள் ராசிநாதனாகவும் பத்தாம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர். பொருளாதார பற்றாக்குறை நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடிவரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வு பெறவும் காலம் கனியும். கூட்டு விற்பனை தொடங்கலாம். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள்.

(சித்திரை 3ஆம்,4ஆம் பாதம், சுவாதி, விசாகம்)
எதையுமே சம நோக்கோடு பார்க்கும் குணம் இயற்கையாகவே இந்த ராசி நேயர்களுக்கு அமைந்திருப்பதால் ஒருவித தனித்தன்மை இவர்களிடம் காணப்படும். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன்.

உங்கள் ராசியில் இப்போது சஞ்சாரம் செய்கின்றார். விரயாதிபதி உங்கள் ராசிக்குள் இருப்பதால் உங்களுக்கு செலவு ஏற்படும். அத்துடன் 9ஆம் இடத்துக்கு உரியவர் என்பதால் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.எல்லா விடயங்களிலும் நிதானமாக நடவுங்கள்.

(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
மற்ற ராசி நேயர்களை விட இதில் பிறந்தவர்களிடையே நல்லதோ,கெட்டதோ மிக தீவிரமாக தெரியும். அதாவது மிதமான போக்கையே காண முடியாத குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு அட்டமாதிபதி (8) விளங்குபவர் புதன்.

உங்கள் 12ஆம் வீட்டுக்குரிய துலாமில் சஞ்சாரம் செய்வதால் நல்ல தேவைகளுக்காக பயணங்கள் ஏற்படலாம். பாராட்டும் புகழும் வந்து சேரும். விபரீத ராஜயோகம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மூத்த சகோதரர்களால் உதவி கிடைக்கும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு.

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)
தவறு செய்தால் பிறருக்குத் தீமை இழைத்தால் கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்று அஞ்சுவர். அதனால் நேர்மையை கடைபிடிப்பவர்களாக விளங்குபவர்கள்.

உங்கள் ராசிக்கு 7ஆம்,10ஆம் இடங்களுக்குரிய புதன் இப்பொழுது துலாம் ராசியில் 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். தொழில் ரீதியாகவும் உத்தியோக ரீதியாகவும் நன்மை அடைவீர்கள். தாய் மாமன் வழி உறவினர்களர்களாலும் மைத்துனர்களாலும் நல்ல உதவிகள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் தரும் வாரம்.

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)
ஆடு பயப்படாமல் நிதானமாக மலை உச்சிக்குப் போய் மேயும். அதேபோல படபடப்பு இல்லாமல் எதையும் யோசித்து பார்த்து செயல்படுவதில் கெட்டிக்காரர்கள். துலாம் ராசிக்கு 10ஆம் இடத்தில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.

உங்கள் ராசிக்கு புதன் 6ஆம்,9ஆம் இடத்துக்குரியவர். உத்தியோக உயர்வு ஏற்படும். நினைத்த காரியம் கைகூடி வரும். பொருளாதாரப் பிரச்சினை சுமூகமாக தீரும் வீடு மாற்றங்கள் ஏற்படலாம். கடன் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதங்கள்)
இரும்பு சம்பந்தமான வியாபாரம் இவர்களுக்கு ஏற்ற தொழில். தொழில் நுணுக்க கல்வி கற்றாலும் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு துலாமில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.

பொன்,பொருள் சேர்வதற்கு வழிவகுத்து கொடுப்பார்கள். ஐந்தும் ஒனபதும் மிஞ்சும் பலன் தரும் என்பார்கள். எனவே 5இற்கு உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் 9 ஆம் இடத்திற்கு வரும். இந்த நேரத்தில் தொழில் வளம் சிறப்பாக இருக்கும்,சொந்த தொழில் வியாபார நிலையம் அமையலாம், நண்பர்கள் உதவி செய்வார்கள்,சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாக தீரும்.

(பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பள்ளிப் படிப்பைவிட இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் திறன் இவர்களிடம் மிகுந்து காணப்படும். உங்கள் ராசிக்கு 4ஆம்,7ஆம் இடங்களுக்கு அதிபதியான புதன் துலாம் ராசிக்கு 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார்.

மறைந்த புதன் நிறைந்த கல்வி என்பார்கள். எட்டில் இருப்பது நன்மை தான். பெற்றோர் வழி ஆதரவு உண்டு. வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். நண்பர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

-கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர பாபு சர்மா குருக்கள் (இயக்குனர்-ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)