July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காதலர் தினத்தன்று வெளியாகும் “ராதே ஷியாம்” படத்தின் முன்னோட்டம்

காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதியன்று ‘பாகுபலி’ பட புகழ் பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷியாம்” படத்திலிருந்து ஒரு முன்னோட்ட காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுபதுகளில் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ராதாகிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார்.

‘ராதே ஷியாம்” என பெயரை பார்த்தவுடன் இது ஒரு வரலாற்றுக் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இது ஐரோப்பாவில் நடந்த ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

இந்தத்திரைப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதுடன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து உள்ளிட்டப் படங்களுக்கு தமிழில் இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று காலை 9.18 மணிக்கு ராதே ஷியாம் படத்திலிருந்து ஒரு முன்னோட்ட காட்சி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.