July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 110 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது யுனிசெப்

உலகளவில், 145இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது தொடர்பாக, இந்தியாவின், சீரம் நிறுவனத்துடன் யுனிசெப் நிறுவனம் உடன்பாடு ஒன்றை செய்துள்ளது.

உலகின் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம், ஒக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனேகா ஆகியவை இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கொவிஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கிறது.

இந்நிலையில்,  இந்தியாவின், சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக, ‘யுனிசெப்’ எனப்படும், ஐநா, குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.

இதேநேரம் 110 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து, 145 நாடுகளில் உள்ள, ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் செலுத்த உள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தின் விலை, 225 ரூபாய் ஆக இருக்கும். இந்த திட்டத்திற்கு ஏராளமான அமைப்புகள் நிதியுதவி செய்துள்ளன.

இதேவேளை உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுவும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல நாடுகள் அணுகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.