அண்மைக்காலமாக சில முக்கிய முன்னணி நடிகர்களின் தமிழ் படங்கள் வேற்று மொழிகளில் ரீமேக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தமிழ் திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன .
அந்த வரிசையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படமும் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் தேதி அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியானது.
இதில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த ஓ மை கடவுளே திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
உணர்ச்சிபூர்வமிக்க காதல் கதையுடன் காமெடியும் கலந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
இவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் .இந்நிலையில் தெலுங்கில் ஓ மை கடவுளே படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போது இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுவதாக அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ரீமேக்காகும் ஓ மை கடவுளே படத்தில் விஜய்சேதுபதி தான் கடவுளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அசோக் செல்வனுக்கு பதிலாக தெலுங்கு நடிகர் விஷ்வக்சென் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து,
தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் அஷ்வத் மாரிமுத்து தான் ஓ மை கடவுளே படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.