கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுகாதார அமைச்சர் ஆபத்தான நிலையில் இல்லை என்று அவரது கணவர் காஞ்சன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதார அமைச்சருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் தான் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் குணமடைந்து வருகிறார். அவருக்கு அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார் எனவும் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து கொக்கலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதேவேளை சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.