July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஜேர்மனியில் கொரோனா தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு”

(Photo: Facebook/Jens Spahn)

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான தட்டுப்பாடு நிலவியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக மிகவும் சவாலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தடுப்பு மருந்து தொடர்பாக ஆராய்வதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், அரசியல்வாதிகளுடன் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த மாநாட்டின் போது மருந்து உற்பத்தி தொழில்துறைக்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது குறித்தும் ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் மாதம் வரையிலான பத்து வாரங்களை சவால் மிக்கதாக எதிர்கொள்ளப் போகின்றோம் எனவும் அதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இதனை எதிர்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை வழங்கும் நடவடிக்கைகளை ஜேர்மனி மந்தகதியில் முன்னெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அஸ்டிராஜெனேகாவிற்கும் இடையில் மருந்து வழங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு உருவாகியுள்ள நிலையிலேயே ஜேர்மனின் சுகாதார அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.