January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஜோடியாகும் பிக்பொஸ் பிரபலங்கள்

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ‘ கூகுள் குட்டப்பன்’ என்ற படம் வெளிவரவுள்ளது. இந்தப்படத்தில் பிக்பொஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாகவும் லொஸ்லியா கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள்.

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.

இந்தப் படத்தில் கே.எஸ். ரவிக்குமார் தன்னுடன் பத்து வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணனை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தப்படத்தில் நடிகர் யோகி பாபு, வில்லனாக ப்ராங்ஸ்டர் ராகுல் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்க இன்று பாடல் பதிவுடன் படத்தின் பணிகள் தொடங்கியது. பெப்ரவரி 14ஆம் திகதியிலிருந்து தென்காசி, குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தப்படத்தில் நடிக்கவிருக்கும் லொஸ்லியா மற்றும் தர்ஷன் பிக்பொஸ் 3 ஆவது சீசனில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.