January 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் ‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் வெளியீடு

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் ஆஹாஸ் விடுதியில் நேற்று மாலை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில், உள்ளூர் கலைஞர்களை ஊக்கு விக்கும் வகையிலும், தற்கொலைக்கு எதிரான விழிர்ப்புணர்வை இன்றைய சமூகங்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும் மன்னார் ஊடக நண்பர்களின் ஆதரவுடன் குறித்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.