January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பட்டா கத்தியில் கேக் வெட்டியதற்கு வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி

பிறந்த நாளை முன்னிட்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதற்கு  நடிகர் விஜய்சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள விஜய்சேதுபதி, ‘எனது பிறந்த நாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன் அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.

ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும் போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.

இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் இது போன்ற விடயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் எனவும் இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விஜய்சேதுபதி  தனது 43 ஆவது பிறந்த நாள் விழாவின் போது பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டிய விவகாரம் சமூக வலைதளங்களிலும்  கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்தே  விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார்.

சென்னையில் பிரபல ரவுடிகள், இளம் வாலிபர்கள் அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளால் கேக் வெட்டி கொண்டாடியபோது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.