
பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரர் அண்டி மர்ரி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள பயணமாக இருந்த நிலையிலேயே, அவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அண்டி மர்ரி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தாலும், அவரிடம் சிறிய நோய் அறிகுறிகளே வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹம்டன்ஸ் தேசிய டென்னிஸ் நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோதே, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
அண்டி மர்ரி எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.