January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாஸ்டர்” படத்தில் விஜய்யின் புதிய புகைப்படங்கள்: உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜயின் 64ஆவது படமான மாஸ்டர் படம் ஒரு தரமான படைப்பாக இருக்குமென ரசிகர்கள் உற்சாகத்தில் எதிர்பார்த்துள்ளனர்.

எதிர்வரும் 13ஆம் திகதி பொங்கல் தினத்தன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுடன் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

மாஸ்டர் பட வெளியீட்டையொட்டி படத்தின் 10 நிமிட புரோமோக்களையும் சில புகைப்படங்களையும் அவ்வப்போது படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் இசையமைப்பில் வெளியாகவுள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி “பவானி” என்ற கதாப்பாத்திரத்தில்  நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக் கோரி தமிழக முதலமைச்சரிடம்  விஜய் நேரில் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்தப்படத்தை திரையில் காண கோடான கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/XBEntertaiment/status/1347113677011484673