-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா
(இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசிக்கு செவ்வாய் சஞ்சரிக்கின்றார்.
இது மிகவும் அற்புதமான நேரமாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். இல்லத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மங்கள ஓசை இப்போது கேட்கலாம்.
மேற்படிப்பு சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேலும் தனுசு இராசியில் புதன் டிசம்பர் 12 ஆம் திகதி சஞ்சாரம் செய்கின்றார்.
இதுவும் உங்களுக்கு நன்மையே. 3 க்கும் 6 க்கும் அதிபதியான புதன் 9 இல் வரும்போது உத்தியோகத்தில் ஏற்றங்களும் மாற்றங்களும் வரும். நீங்கள் கேட்ட சலுகைகளை கொடுக்க உங்கள் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பர்.
பாக்கியஸ்தானம் பலம் பெறுவதால் எதிர்பாராத திருப்பங்கள் உருவாகும். பெற்றோரின் உதவியுடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
(கார்த்திகை 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம் ரோகினி)
டிசம்பர் 9 முதல் செவ்வாய் மேஷ இராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றார். மேஷ இராசி செவ்வாயின் சொந்த வீடாகும்.
உங்கள் இராசிக்கு விரயஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் இக்காலத்தில் விரயங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். உடன்பிறப்புகளின் திருமணத்தை முன்னின்று நடத்தும் வாய்ப்பு உண்டு.
ஊர்மாற்றம் , வீடுமாற்றம் , உத்தியோக மாற்றம் போன்றவை கூட வரலாம். திசாபுத்தி பலம் இழந்தவர்கள் வாங்கிய இடத்தை விற்கநேரிடும். மேலும் தனுசு இராசியில் டிசம்பர் 12 ஆம் திகதி சஞ்சரிக்கும் புதன் மறைந்திருக்கின்றார்.
மறைந்த புதனால் நிறைந்த தனஇலாபம் ஏற்படும். எனினும் தனபஞ்சம அதிபதியாக புதன் விளங்குவதால் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.
பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பின்னர் அவை சுமூகமாக தீர்ந்துவிடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் திடீரென விலக நேரிடும்.
(மிருகசீரிடம் 3 ஆம், 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர் பூசம் 1 ஆம், 2 ஆம், 3 ஆம் பாதம்)
டிசம்பர் 9 முதல் மேஷ இராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் 11 ஆம் இடத்துக்கு அதிபதியானவர் பலம்பெறும் இந்நேரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரலாம்.
தொழில் வளர்ச்சிக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு நல்ல தகவல் வரலாம்.
நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கலாமா என யோசித்தவர்களுக்கு இது உகந்த நேரமாகும். மேலும் டிசம்பர் 12 ஆம் திகதி தனுசு இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.
உங்கள் இராசிநாதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்நேரத்தில் பொருளாதார பற்றாக்குறை அகலும்.
புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை வரவழைத்து கொடுப்பர். ஒதுங்கி நின்ற ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
(புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்கின்றார். தொழில்ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழில்வளம் சிறப்பாக இருக்கும்.
அதிகார பதவியிலுள்ளவர்களின் ஆதரவோடு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மேலும் சொத்துக்களாலும் சொந்தங்களாலும ஆதாயம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும் உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். டிசம்பர் 12 ஆம் திகதி தனுசு இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.
உங்கள் இராசிக்கு 3 , 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் 6 ஆம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். அங்கிருந்து மிதுன இராசியான தனது சொந்த வீட்டை பார்ப்பதால் அற்புதமான பலன்கள் வந்துசேரும்.
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். தற்காலிக பணியில் இருந்தவர்கள் நிரந்தர பணியை பெறுவார்கள்.
(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசிக்கு சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் இராசிக்கு யோகம் தரும் கிரகமாகும்.
அவர் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும்போது தொட்ட காரியங்கள் துலங்கும். உடன்பிறந்தவர்களும் உடன் இருப்பவர்களும் உறுதுணையாக இருப்பார்கள். வீடுமாற்றம் , நாடு மாற்றம் பற்றிய சிந்தனை ஒரு சிலருக்கு உருவாகலாம்.
மேலும் டிசம்பர் 12 ஆம் திகதி முதல் தனுசு இராசிக்கு புதன் சஞ்சாரம் செய்கின்றார். இக்காலத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும்.
பூர்வீக சொத்துக்களை பங்கிடுவதில் இருந்த தடைகள் அகலும். உறவினர் வழியில் மங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.
பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சியும் வெளிநாடு சென்று பணிபுரிய எடுத்த முயற்சியும் பலன் தரும் காலமாகும்.
(உத்தரம் 2 ஆம்,3 ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் செவ்வாய் சஞ்சரித்து கொண்டிருக்கிறார். அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்நேரத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை.
மூட்டுவலி , முழங்கால் வலி போன்ற ஏதாவதொரு தொல்லை தினமும் இருக்கும். ஒருசிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிடலாம்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வீண்பழிகள் ஏற்படும். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாக விளங்கும் காலம். மேலும் டிசம்பர் 12 முதல் உங்கள் இராசிநாதன் புதன் தனுசு இராசிக்கு சஞ்சாரம் செய்கின்றார்.
அங்கிருந்து தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். எனவே, தொழில்வளம் சிறப்பாக இருக்கும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார விருத்திக்கு அடித்தளம் அமைத்துக்கொடுப்பர்.
புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. பழைய கடன் சுமையிலிருந்து விடுபடும் வாய்ப்புகளும் ஏற்படும்.
(சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் செவ்வாய் சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றார். மேஷ இராசி செவ்வாயின் சொந்த வீடாகும்.
உங்கள் இராசிக்கு சப்தமாதிபதியான செவ்வாய் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்நேரத்தில் சகோதர ஒற்றுமை பலப்படும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக நடைபெறும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றிகிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிலர் விருப்பு ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் ஏற்படலாம். டிசம்பர் 12 முதல் தனுசு இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.
உங்கள் இராசிக்கு 9 , 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 3 ஆம் இடத்துக்கு வரும்போது உடன்பிறப்புகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சி பாதையை நோக்கிச்செல்லும்.
(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்கின்றார். மேஷ இராசி செவ்வாயின் சொந்தவீடாகும்.
உங்கள் இராசிநாதன் பலம்பெறுகின்றார். இந்நேரத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த இலாபம் தொழிலில் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும் சலுகைகளும் கிடைத்து சந்தோஷமடைவர். டிசம்பர் 12 முதல் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் புதன்.
உங்கள் இராசிக்கு இலாபாதிபதியான புதன் தனஸ்தானத்திற்கு வரும் இந்நேரம் தொழிலில் தனஇலாபம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக கிடைக்கும்.
அலுவலகத்தில் தாமதித்த காரியங்கள் இனி தடையின்றி நடைபெறும். கௌரவப் பதவிகள் தேடிவரும்.
(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்கின்றார். இக்காலம் இனிய காலமாகும். நிழல்போல் தொடர்ந்து வந்த பிரச்சினை படிப்படியாக குறையும்.
அதிகார பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு புதிய திருப்பங்களை காண்பீர்கள். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். பல நாட்களாக முயற்சித்து நடைபெறாத காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும்.
டிசம்பர் 12 முதல் தனுசு இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார். உங்கள் இராசிக்கு 7 , 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் இராசியில் சஞ்சரிக்கும்போது கல்யாண முயற்சிகள் கைக்கூடும்.
கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்ப முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
நீண்ட நாட்களாக முடிவெடுக்காத பிரச்சினைகளுக்கு இப்போது முடிவெடுப்பீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வரலாம்.
(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்கின்றார். உங்கள் இராசிக்கு சுக இலாபாதிபதியாக விளங்கும் செவ்வாய் சுகஸ்தானத்திலேயே வீற்றிருப்பது நல்லது.
அதன் விளைவாக உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். சகோதர பாசம் கூடும்.
நீண்டநாள் கனவுகள் நனவாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். டிசம்பர் 12 முதல் தனுசு இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.
உங்கள் இராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் 12 ஆம் இடத்துக்கு வருவது யோகம்தான் இக்காலத்தில் நினைக்கமுடியாத யோகங்கள் வந்துசேரலாம்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். மாமன் , மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் அகலும்.
(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1 ஆம்,2 ஆம், 3 ஆம் பாதம்)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்கின்றார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும்.
சகாயஸ்தானாதிபதி தனது சொந்த வீட்டிலர் சஞ்சரிக்கும் போது மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகிய காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நல்ல தகவல்கள் இல்லம் தேடிவரும். டிசம்பர் 12 முதல் தனுசு இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.
உங்கள் இராசிக்கு இலாபஸ்தானத்துக்கு புதன் வருவதால் நன்மை. பஞ்சமாதிபதி இலாபஸ்தானத்திற்கு வரும் இந்நேரம் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும் நேரமாகும்.
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பு உயரும். உத்தியோகம் நிரந்தரமாகலாம்.
(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் மேஷ இராசியில் சஞ்சாரம் செய்யும் செவ்வாய் உங்கள் இராசிக்கு 2 , 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர்.
தனாதிபதி தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்நேரம் மிகுந்த யோகமான நேரமாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இடம்பெறும்.
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதியும் கல்வி முன்னேற்றம் கருதியும் நீங்கள் எடுத்த முயற்சி வெற்றிபெறும்.
புதிய வாகனங்கள் வாங்கி பயணிக்க யோகம் ஏற்படும். மேலும் டிசம்பர் 12 முதல் தனுசு இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார்.
அன்புள்ள சனியோடு சேருகின்றார். இக்காலத்தில் தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமைவகிப்போரின் நம்பிக்கையை பெற்றுகொள்வீர்கள்.
புதிய ஒப்பந்தங்கள் வருவதில் இருந்த தடைகள் அகலும். பிள்ளைகளின் வேலை தொடர்பாக எடுத்த முயற்சிகள் பலன் தரும்.
அத்தோடு அவர்களால் உங்களுக்கு வருமானமும் கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினைகள் சுமூகமாக நடக்கும்.