January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயார்; தேமுதிக

தமிழகத்தில் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயார் என நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் செயற்குழு கூட்டம் கூட்டப்படும். அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக இவ்வாறு தெரிவித்துள்ளமை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமலதாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக கூட்டணியிலிருந்து அந்த கட்சி விலகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தனித்து போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது, பிரசார பணிகளுக்கு தயாராவது உள்ளிட்ட உயர்மட்ட வியூகங்களை வகுப்பதில் கட்சிகள் முனைப்புடன் களமிறங்கியுள்ள.