
கடந்த சில நாட்களாக அதிமுகவினர் மற்றும் எதிர்க்கட்சியான திமுகவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது .
அந்த வகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையிலான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பரஸ்பரம் இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுகவின் ஆ.ராசா 2 ஜி ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க முதலமைச்சர் வருவாரா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
பின்னர் சில நாட்கள் கடந்த நிலையில் என்னுடன் விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்வராதது ஏன் என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அழைத்தவுடன் நான் சென்று விவாதிக்க அவர் என்ன பெரிய தலைவரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த ராசாவை தவறு செய்த காரணத்தினால் தான் காங்கிரஸ் அரசே கைது செய்து சிறையில் அடைத்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆ. ராசா திமுக கட்சிக்கு வேண்டுமானால் பெரிய தலைவராக இருக்கலாம்.அதற்கும் பணம் தான் காரணம் என முதலமைச்சர் சாடியுள்ளார் .