January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அண்ணாமலை சைக்கிளா? பாபா முத்திரையா?; கட்சி சின்னம் குறித்து ரஜினி ஆராய்வு

அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந், கட்சியின் சின்னமாக அண்ணாமலை சைக்கிளை தெரிவு செய்வதா அல்லது பாபா முத்திரையை தெரிவு செய்வதா என ஆராய்ந்து வருகின்றார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பிரவேசம் பற்றி ரஜினிகாந் அறிவித்தபோது, மன்ற கொடியையும் அதன் சின்னமாக பாபா படத்தில் பிரபலமடைந்த பாபா முத்திரையையும் அறிமுகப்படுத்தினார். ரசிகர்கள் மத்தியில் பாபா முத்திரை பிரபலமானது.

எனவே கட்சிக்கும் பாபா முத்திரையை சின்னமாக வைக்க ரஜினி விரும்பி உள்ளார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்கள் பட்டியலை ஆய்வு செய்துள்ளனர்.

ஆனால் அதில் பாபா முத்திரை எதுவும் இல்லை. அந்த முத்திரை போல் முத்திரை சின்னம் ஒதுக்க முடியுமா? என்று தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள்.

அந்த சின்னம் இல்லையென்றால் சைக்கிள் சின்னம் கேட்கலாம் என்றும் யோசித்து வருகிறாராம். அண்ணாமலை படத்தில் பால்காரர் பாத்திரத்தில் சைக்கிளில் வலம் வருவார் ரஜினி. அதுவும் மக்களிடம் பிரபலமானதுதான்.

ஏற்கனவே சைக்கிள் சின்னம் த.மா.கா.விடம் இருந்தது. பின்னர் அந்த சின்னம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த இரு சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்வது பற்றி ரஜினி ஆலோசித்து வருகிறாராம்.