January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (06. 12. 2020 – 12.12. 2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா
(இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)

உங்கள் இராசிநாதன் செவ்வாய் இதுவரை மீன இராசியில் வக்கிரம் பெற்று சஞ்சரித்து வந்தார். நவம்பர் 24 ஆம் திகதி அவர் வக்கிர நிவர்த்தியானார்.

இராசிநாதன் பலம்பெற்றுள்ள இந்நேரம் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இணைந்து செயற்பட சகோதரர்கள் முன்வருவார்கள். சொத்துக்கள் வாங்குவது அல்லது விற்பதில் இருந்த தடைகள் நீங்கும்.

மேலும் துணிந்து சில முடிவுகளை எடுத்து தொழில் வளத்தை மேம்படுத்துவீர்கள். 7 ஆம் இடத்தில் சஞ்சரித்துவந்த புதன் நவம்பர் 25 ஆம் திகதி 8 ஆம் இடத்திற்கு வந்துள்ளார். புதனால் நிறைந்த தனலாபம் ஏற்படும். அதாவது மறைந்த புதன் நிறைந்த இலாபத்தை தரும்.

உங்கள் இராசிக்கு 3 , 6 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6இற்கு அதிபதி 8க்கு வரும்போது இல்லறம் தேடி நல்ல மாற்றங்கள் வரும்.
(கார்த்திகை 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம் ரோகினி)

நவம்பர் 24 ஆம் திகதி செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். விரயாதிபதி இலாபஸ்தானத்தில் பலம்பெறும்போது விரயத்திற்கேற்ற வரவு இருக்கும். திருமண முயற்சிகள் கைக்கூடும்.

உத்தியோகத்தில் நீண்டதூர பயணங்களும் சம்பள உயர்வும் ஏற்படும். நவம்பர் 25 ஆம் திகதி புதன் விருச்சிக இராசிக்கு சென்றார். உங்கள் இராசிக்கு 2 ,5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சப்தமஸ்தானத்தில் 7 ஆம் இடத்தில் புதன் சஞ்சரிக்கின்றார்.

குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் இடம்பெறும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுகள் திடீரென உருவாகி இல்லத்தில் மங்கள ஓசை கேட்க வழிபிறக்கும்.

பிள்ளைகளின் மேற்படிப்பு தொடர்பாக எடுத்த முயற்சிகளும் தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளும் கைக்கூடும். மேலும் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாதவர்கள் சொந்த ஊருக்கு வந்துசேரலாம்.
(மிருகசீரிடம் 3 ஆம், 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர் பூசம் 1 ஆம், 2 ஆம், 3 ஆம் பாதம்)

நவம்பர் 24 ஆம் திகதி செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். உங்கள் இராசிக்கு 6 , 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்கிர நிவர்த்தியாகும் போது நன்மைகள் அதிகம் இடம்பெறும்.

எதிர்பார்த்த இலாபம் தொழிலில் கிடைக்கும். மூத்த சகோதரர்களுடன் இருந்த பகை அகலும். தொழில்வளம் சிறப்பாக இருக்கும். நவம்பர் 25 ஆம் திகதி முதல் புதன் விருச்சிக இராசிக்கு வந்துள்ளார்.

உங்கள் இராசிநாதன் புதன் 6 ஆம் இடத்திற்கு வரும்போது எதிரிகள் பலம் குறையும். இலாப நோக்கத்தோடு பழகியவர்களை இணங்கண்டுகொள்வீர்கள்.

உத்தியோகம் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சுகஸ்தானாதிபதியாகவும் புதன் விளங்குவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)

நவம்பர் 24 ஆம் திகதி செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். உங்களுக்கு யோகமான நேரம். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்கு செவிசாய்ப்பார்கள். விரோதித்தவர்கள் கூட உங்களுடன் ஒத்துவருவர்.

எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வரலாம். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். நவம்பர் 25 ஆம் திகதி முதல் விருச்சிக இராசிக்கு புதன் வந்துள்ளார்.

உங்கள் இராசிக்கு 3 , 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 5 ஆம் இடத்தில் பஞ்சமஸ்தானத்திற்கு வரும்போது சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக அமையும்.

புதிய ஆதித்ய யோகம் ஏற்படும். பிள்ளைகளின் மேற்படிப்புக்காக எடுத்த முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.
(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

நவம்பர் 24 ஆம் திகதி மீனத்தில் சஞ்சரித்துக்கொண்டிந்த செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். இந்நேரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயற்படுவது நல்லது. அஷ்டமத்தில் செவ்வாய் பலம்பெறும்.

இந்நேரத்தில் ஆரோக்கிய தொல்லைகள் ஏற்படலாம். அதிக முயற்சிகள் எடுத்தாலும் கூட சில காரியங்கள் முடிவடையாமல் போகலாம்.

முறையான வழிபாடுகளும் பரிகாரங்களும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். நவம்பர் 25 ஆம் திகதி முதல் விருச்சிக இராசிக்கு புதன் வந்துள்ளார்.

உங்கள் இராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான தனலாபாதிபதியான புதன் சுகஸ்தானத்திற்கு வரும்நேரம் நல்லநேரம்தான். எதிர்காலம் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.

வீடு வாங்கும் யோகம் உண்டு. சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.
(உத்தரம் 2 ஆம்,3 ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)

உங்கள் இராசிக்கு 3 ஆம் , 8 ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இப்பொழுது மீன இராசியில் குரு வீட்டில் வக்கிரம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல பலன்களை இது கொடுக்காது.

செவ்வாய் உங்கள் இராசிக்கு நேர்பார்வையில் இருப்பதால் உங்களுக்கு கோபம் அதிகம் வரலாம். உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசிவிட்டு உறவினர்களின் பகையைத் தேடிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.

மேலும் கட்டிய வீட்டுக்கு போய்சேரவில்லையே என்ற மனோநிலையும் உங்களுக்கு இருக்கும். சில சொத்துக்கள் விற்கப்படாதிருப்பதையிட்டு மனதில் கவலை இருக்கும். அயலவர்களுடனும் உறவினர்களுடனும் அனுசரித்து செல்லுங்கள்.

(சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் மாத தொடக்கத்தில் வக்கிரம் பெற்று மீன இராசியில் சஞ்சரிக்கின்றார். எனவே, உங்கள் திறமைக்கேற்ற பலன் கிடைக்காது.

சகோதர வர்க்கத்தினர் உங்களுக்கு எதிராக செயற்படுவர். கூட்டு முயற்சியில் மாற்றம் ஏற்படலாம். உங்களுக்கோ உங்களை சார்ந்தவருக்கோ மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது முழுகவனம் தேவை.

மேலும் உங்கள் இராசிநாதன் புதன் நவம்பர் 25 ஆம் திகதி விருச்சிக இராசிக்கு செல்கின்றார். அங்குள்ள சூரியனோடு இணைந்து புது ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைக்கூடும்.

பட்ட மேற்படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையென கவலைப்பட்டவர்களுக்கும் வெளிநாட்டில் சென்று படிக்கவேண்டுமென நினைத்தவர்களுக்கும் நல்ல தகவல் வந்துசேரும்.

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

நவம்பர் 24 ஆம் திகதி மீனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்கிர நிவர்த்தியாகினார். உங்கள் இராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்கிர நிவர்த்தியாவது உங்களுக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். குடியிருந்த வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். திருமண முயற்சியில் இருந்த தடைகள் அகலும். நவம்பர் 25 ஆம் திகதி முதல் விருச்சிக இராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் இராசிக்கு 9 , 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன்.

இவர் இப்பொழுது தனஸ்தானத்திற்கு வருகின்றார். விரயாதிபதியான புதன் தனஸ்தானத்திற்கு வந்துசேரும் இந்த நேரத்தில் விரயத்திற்கேற்ப பணவரவு கிடைத்துக்கொண்டேயிருக்கும்.

வீடு மாற்றமும் உத்தியோக மாற்றமும் விரும்பியபடி அமையும். வெளிநாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகளும் வந்துசேரும்.

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

நவம்பர் 24 ஆம் திகதி மீனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். உங்கள் இராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். புத்திரஸ்தானாதிபதி செவ்வாய் பலம்பெறும் இந்நேரத்தில் பிள்ளைகளால் பெருமைசேரும்.

தொழில்வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொடுப்பர். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான தகவல் வந்துசேரும்.

நவம்பர் 25 ஆம் திகதி முதல் விருச்சிக இராசிக்கு புதன் வந்துள்ளார். இதன்மூலம் மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கள நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

தொழில்புரியும் இடத்தில் இருப்பவர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். இடமாற்றம் , ஊர்மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பயணத்தால் விரயம் உண்டு.

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

நவம்பர் 24 ஆம் திகதி மீனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். உங்கள் இராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்கிர நிவர்பர்தியாகும் இந்நேரத்தில் பொருளாதர வளர்ச்சி ஏற்படும்.

வாடகை கட்டிடத்தில் நடத்திய தொழிலை சொந்த கட்டிடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். அரச வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல செய்தி வந்துசேரும்.

நவம்பர் 25 ஆம் திகதி விருச்சிக இராசிக்கு புதன் செல்கின்றார்.உங்கள் இராசிக்கு 6 , 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன்.

அவர் இலாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது ஜீவனஸ்தானம் பலப்படும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் கூட மீண்டும் பணியில் சேரும் வாய்ப்புவரும்.

வெளிநாட்டு முயற்சிள் கைக்கூடாவிட்டாலும் வெளி இடங்களிலிருந்து அழைப்புகள் தாஅல்லது உதவிகள் ஏதோவொரு விதத்தில் வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த பிரச்சினை அகலும். எலும்பு, நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படலாம்.

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1 ஆம்,2 ஆம், 3 ஆம் பாதம்)

நவம்பர் 24 ஆம் திகதி மீனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். இக்காலத்தில் இடம், பூமி ஆதாரம் கிடைக்கும். உடன்பிறப்புகளில் உடல்நலம் சீராகும்.

வழக்குகள் சாதகமாக அமையும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாக்குஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கோபம் சற்று அதிகரிக்கலாம். கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

நவம்பர் 25 ஆம் திகதி முதல் விருச்சிக இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார். உங்கள் இராசிக்கு பஞ்சம அஷ்டம அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.

பூர்வீக சொத்து பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட கட்டுமாணப் பணிகள் தானாக நடைபெறும். அரசியல் , பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் வந்துசேரும்.

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நவம்பர் 24 ஆம் திகதி மீன இராசியான உங்கள் இராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்கிர நிவர்த்தியானார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும்.

தொழில் ரீதியாக அரச வழியில் அனுகூலம் கிடைக்கும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கிய சொத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தொழிலை விரிவுசெய்வீர்கள்.

நவம்பர் 25 ஆம் திகதி முதல் விருச்சிக இராசியில் புதன் சஞ்சாரம் செய்கின்றார். உங்கள் இராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். புதன் அதன் 9 ஆம் இடத்துக்கு வரும்நேரம் நல்ல நேரமாகும்.

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவார்கள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அகலும். தக்கசமயத்தில் நண்பர்கள் கைக்கொடுத்து உதவுவார்கள்.