January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இருபது20 கிண்ணம் நியூஸிலாந்து வசம்

photo/Blackcaps/facebook

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரை 2-0 எனும் ஆட்டக் கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது.

தொடரின் மூன்றாவதும், இறுதியுமான சர்வதேச இருபது20 போட்டி மவுன்ட் மௌவ்கனியில் நடைபெற்றது.

Embed from Getty Images
எனினும் 2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது.

நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான லுக்கி பேர்கஸன் தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார்.

இரு அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி ஹெமில்டனில் ஆரம்பமாகவுள்ளது.