January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து: கிரிஸ்டல் பெலஸை வீழ்த்தியது நியூ காஸல்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில் “கிரிஸ்டல் பெலஸ்” கழக அணிக்கு எதிரான போட்டியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு “நியூ காஸல்” கழக அணி வெற்றி பெற்றது.

போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் போட முயற்சித்த போதிலும் ஒருவராலும் கோல் போட முடியவில்லை. முதல் பாதி ஆட்டம் கோலின்றியே முடிந்தது.

இரண்டாம் பாதியிலும் இரண்டு அணிகளின் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடினர். ஆனாலும் கோல் எல்லையை மாத்திரம் எவராலும் நெருங்க முடியவில்லை.

போட்டி நிறைவுபெறும் தருணத்தை எட்டிய நிலையில் நியூ காஸல் அணி வீரரான வில்சன் கோலொன்றைப் போட்டார். 88ஆவது நிமிடத்தில் அந்த கோல் பதிவானது.

அடுத்த நிமிடத்தில் ஜொலின்டனும் கோலடிக்க நியூ காஸல் அணி இரண்டாவது கோலையும் போட்டது. இந்தப்போட்டியில் ஜொலின்டன் போட்ட முதலாவது கோலாகும்.

கிரிஸ்டல் பெலஸ் அணி வீரர்களால் இறுதிவரை கோலடிக்க முடியவில்லை. போட்டியில் 2-0 எனும் கோல் கணக்கில் நியூ காஸல் அணி வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் நியூ காஸல் அணி 14 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திலும் கிரிஸ்டல் பெலஸ் அணி 13ஆம் இடத்திலும் உள்ளன.