January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஏடிபி பைனல்ஸ்”டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்

(Phot0: Novak Djokovic/Facebook)

“ஏடிபி பைனல்ஸ்” சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரெவ்க்கு எதிரான போட்டியில் ஜோகோவிச் வெற்றியீட்டினார்.

ஏடிபி உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று லண்டனில் நடைபெற்று வருகின்றது. இதில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை வகிக்கும் வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

தலா நான்கு வீரர்கள் வீதம் இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டிகள் நடத்தப்படுவதுடன், இரண்டு அணிகளிலும் முன்னிலை பெறும் இருவர் இறுதிப் போட்டிக்குத் தெரிவுசெய்யப்படுவர்.

அந்தவகையில், ஜோகோவிச் மற்றும் அலெக்ஸாண்டர் ஸ்வரெவ்க் மோதிக்கொண்டதோடு, 6-3, 6-4 எனும் நேர் செட்களில் ஜோகோவிச் வெற்றியீட்டினார்.

இதற்கமைய, ஏடிபி பைனல்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நொவெக் ஜோகோவிச் அரையிறுதியை உறுதிசெய்தார்.

ஏடிபி பைனல்ஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில், அவர் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற ஒன்பதாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏடிபி பைனல்ஸ் சாம்பியன் ஷிப் டென்னிஸ் தொடர் 50 ஆவது ஆண்டாக இந்த முறை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.