
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தென் அமெரிக்க கண்ட தகுதிகாண் சுற்றில் உருகுவேவுக்கு எதிரான போட்டியில் 2-0 எனும் கோல் கணக்கில் பிரேஸில் வெற்றிபெற்றுள்ளது.
உருகுவேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேஸிலின் நட்சத்திர வீரரான நெய்மார் உபாதை காரணமாக விளையாடவில்லை.
அதேபோன்று, உருகுவேயின் நட்சத்திர வீரராக லூவிஸ் சுவாரெஸ் கொரோனா தொற்று காரணமாக இந்தப் போட்டியை இழந்தார்.
போட்டியை சிறப்பாக ஆரம்பித்த பிரேஸில் அணி, முதல் அரையாட்டத்தில் 2 கோல்களைப் போட்டது.
33 ஆவது நிமிடத்தில் அர்துர் ஹென்ரிக்கும், 45 ஆவது நிமிடத்தில் ரிச்சர்ஸிலினும் கோலடித்தனர்.
உருகுவே அணியால் கோலடிக்க முடியாது போக முதல் அரையாட்டத்தில் 2-0 என பிரேஸில் வசமானது.
போட்டியின் இரண்டாம் அரையாட்டத்தில் இரு அணிகளுமே கோலடிக்க முயற்சித்த போதிலும், பலனளிக்கவில்லை.
உருகுவே அணி வீரரான எடிசன் கவானி முரட்டுத்தனமான செயற்பாடு காரணமாக 71வது நிமிடத்தில் நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ளதுடன், பிரேஸில் 5 தடவைகளும், உருகுவே 2 தடவைகளும் உலக சாம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.