January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கொரோனா தொற்று

தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச இருபது20 மற்றும் சர்வதேச ஒருநாள் தொடர்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், தென் ஆபிரிக்க அணி வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமது அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உட்பட 50 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான வீரர்களை கேப் டவுனில் தனிமைப்படுத்தி, கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, புதுமுக வீரர்கள் மூவரை அணியில் இணைத்துக்கொள்வது குறித்தும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது20 தொடர் பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி எதிர்வரும் 27 ஆம் திகதி கேப் டவுனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.