இலங்கையில் பாரிய அளவில் உயர்வடைந்துள்ள தேங்காயின் விலை எதிர்வரும் மாதங்களில் குறைவடையும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பியசேன எதிரிமான்ன தெரிவித்தார்.
தேகாயின் விலையை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட வகை தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு 10 வர்த்தகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் பியசேன எதிரிமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் சர்வதேச சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளமையினால் இருவர் மாத்திரமே இறக்குமதி செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மார்ச் மாதத்திற்குள் நாட்டில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதால் எதிர் வரும் மாதங்களில் தேங்காயின் விலை வீழ்ச்சி அடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சந்தையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 தொடக்கம் 120 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.