இலங்கையின் 76ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை தீவின் பல பாகங்களிலும் நடைபெற்றது. ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கறுப்பு தினமாக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் பிரித்தானியாவின் லண்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழர்களுக்கு சர்வதேச மத்தியஸ்தத்துடனான தீர்வை வழங்க ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.