January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய இராச்சியத்திலுள்ள யாழ். இந்து பழைய மாணவர்களின் கலையரசி நிகழ்வு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளை ஏற்பாடு செய்துள்ள கலையரசி நிகழ்வு ஜூலை 2 ஆம் திகதி மிக பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பாடகர் ஹரிச்சரணின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இதில் பாடகர்கள் ரக்ஸிதா மற்றும் பெனட் ஆகியோரும் இணையவுள்ளனர்.

வழமை போலவே இந்த வருடமும் கலையரசி நிகழ்வு ஐக்கிய இராச்சியத்திலுள்ள டோக்கிங் மண்டபத்தில் (Grand Hall , Dorking Halls) நடைபெறவுள்ளது.

ஏற்கனவே பல்வேறு செயற்திட்டங்களை தாயக மக்கள் சார்ந்து செயற்படுத்திவரும் யாழ். இந்துக்கல்லூரி பழையமாணவர்கள் சங்கம், இந்த விழாவின் மூலம் சேர்க்கப்படும் நிதியை தாயகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிக்காக பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களால் யாழ். இந்துவில் பரீட்சை பெறுபேறுகளை முன்னேற்றுவதற்காக மாலை நேர வகுப்புக்கள் நடத்தப்படுவதுடன், “அறிவுப்பாலம்” எனும் திட்டத்தின் கீழ், தண்டுவான், முல்லைத்தீவில் மகாதேவா படிப்பகமும் சம்பூர், திருகோணமலையில் சபாநாயகம் படிப்பகமும் நடத்திச் செல்லப்படுகின்றது.