January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரான்ஸ்: தமிழ்க் குடும்பத்தில் நடந்த வன்முறையில் சிறுவர்கள் உட்பட ஐவர் பலி, மேலும் ஐவர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் நொவஸி லெ செக் (Noisy-le-Sec ) என்ற புறநகர்ப் பகுதியில் வீடொன்றில் நடந்த வன்முறையில் நான்கு சிறுவர்களும் பெண்ணொருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் தமிழ்க் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்களுக்கு அருகிலிருந்து கத்தி ஒன்றையும் சுத்தியல் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சென் சான் டெனி (Seine-Saint-Denis) என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐவரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலை நடத்தியவர் எனக் கருதப்படும், குறித்த குடும்பத்தின் மாமா உறவு முறையான ஒருவரும் காயமடைந்து மயக்கமான நிலையில் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை, குறித்த பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றுக்கு இரத்தம் வழிந்த நிலையில் ஓடிவந்த இளைஞர் ஒருவர் தனது மாமா, குடும்பத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார் என்று பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.