May 23, 2025 11:01:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் நிலைமை தீவிரமாக உள்ளது’; தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை தீவிரமாக உள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

உயிர் பயத்தோடு இருக்கும் மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என ஸ்டாலின் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமாக இருக்கிறது.மருத்துவ அவசரநிலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை தீவிரமாக உள்ளது

கட்டளை மையம் உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை கட்டணத்தில் முடிந்த அளவு சலுகை அளிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸிஜன் இருப்பு, படுக்கை வசதி குறித்தான தகவல்களை இணையத்தில் வெளியிட்டால் பயனளிக்கும் எனவும் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.