April 17, 2025 20:21:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூர்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சூர்யாவிற்கு எதிராக எழுந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் என புகார்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இது விவகாரம் தொடர்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருடன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனைகளை நடத்தினர்.

இதன் பின்னர் நடிகர் சூர்யாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை பொதுவிவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது கவனம் தேவை என சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சூர்யாவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் விமர்சனங்கள் நியாயமாகயிருக்கவேண்டும் எல்லை மீறக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது,