July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளை குற்றவாளி ஆக்குங்கள்: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளை குற்றவாளிகளாக்குங்கள் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் காணொளி மூலம் ஆற்றிய உரையில் மோடி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பயங்கரவாதமே உலகம் இன்று எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை என தெரிவித்துள்ள நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும்; உதவும் நாடுகளை குற்றவாளிகளாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், இந்த பிரச்சினைக்கு திட்டமிடப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயம் இறுதியாக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள நரேந்திரமோடி, இது மிகவும் முக்கியமான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, திட்டம் குறித்து பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆராயவேண்டும்.

கொவிட் 19 மருந்துகளிற்கு புலமைச்சொத்து உடன்பாடுகளில் இருந்து விலக்களிக்கவேண்டும்.

இந்தியாவின் மருந்து உற்பத்தி திறமையையும் அதனை வழங்குவதற்கான திறமையையும் மனித குலத்திற்கு பயன்படும் வகையில் பயன்படுத்தப்போவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.