July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய பெருங்கடலில் பிரம்மோஸ் ஏவுகணையை சோதிக்க இந்தியா திட்டம்

லடாக் எல்லையில் சீனாவுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுரியா ,பிரமோஸ் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை செலுத்தி இந்தியா சோதித்து வருகிறது.

இந்நிலையில் ஒலியை விட வேகமாக சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை இந்த மாத இறுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் செலுத்தி பரிசோதிக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கப்பல், விமானம் மற்றும், செலுத்து வாகனத்தில் இருந்து ஏவுகணைகளை செலுத்தி பரிசோதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் 450 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன் பெற்றவையாகும்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளத்திலும் பிரம்மோஸ் ஏவுகணை ஒன்று நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.